சிங்கார சீமையில.. (சினிமாப் பாடல்)

விசில்’ [2003] திரைப்படத்தில் வருகிற பாடல் இது. கற்பு, பத்தினி போன்ற கற்பிதங்களில் நம்பிக்கையற்ற போதும் இந்தப் பாடலில் வருகிற துயரமும் குரலது ஏக்கமும் எப்போது கேட்டாலும் மனதை உருக்குகிறது. அத்துடன் இப் பாடலில் உள்ளூறும் தமது மானத்திற்காக தமது பெண்களை பலியிடத் துணியும் ஆண் குலம் மீதான விமர்சனமும் – அத்துடன் நாட்டுப்பாடல்களின் தன்மைகொள் குரலும் பிடித்திருக்கிறது.

கதை சொல்லும் ஆண் குரல்:

சிங்கார சீமையில

தென்கோடி மூலையில

சீராக வாழ்ந்த குடும்பம் – அந்த

திக்கு எட்டும் பேர் விளங்கும்.

இக் கால பாண்டவரு என்றிங்கு வாழ்ந்தவரு

ஒண்ணாக அஞ்சு பேரும்மா

ரொம்ப ஒற்றுமையாய் வாழ்ந்தாரம்மா…

 

யில்லா கலெக்டர் என்னும் திமிரினிலே

வெள்ளப் பறங்கியன் ஒருத்தியின் எமனானான்

பாதம் தொட வளர்ந்த கூந்தலிலே வந்த மயக்கத்தில்

அவன் மனம் ஏங்கி நின்றான்

உயர் அழகினில் அவள் ஒரு செப்பச் சிலைதான்

கற்புக்கரசியின் வழி வந்த குலமகள்தான்

யாரு கண்ணு பட்டு…

போனா மண்ணுப் பட்டு…

மண்ணாள வந்த தொர

கண்ணால ஆசையில

பெண் கேட்டு வந்து நின்னான்

மார்பிலும் உங்கள் தோள்களிலும்

இந்த மைலா சாய்ந்தது…

போர்மகள் உங்கள் ஐவருக்கும் என

இவளா வாழ்ந்தது…

ஐயன் மார் ஐந்து பேரும்

ஒன்றாகச் கூடி நின்று ஏதேதோ பேசி முடித்தார்

அதில் மானத்தைத் தான் வாழ வைத்தார்

பெண் குரல்:

உயிரோடு வைத்து

புதைக்காதே என்னை

உயிராகக் காத்த ஐயா….!

மரணத்தின் முதல் அடி இது என்று

மனசுக்குப் புரிந்தது அது இன்று

இது விதியோ இல்லை சதியா இது சரி..யா

இரண்டடி மூடிற ஒரு வேளை – என்

இருதயம் துடித்திடும் குரலோசை

உங்கள் செவியில் இன்று விழுமா.. இது விழுமா

மூன்றடி மூடுற நேரம்…

நாலடி மூடுற நேரம்..

பெண்ணாய் வந்தவள் நான்

மண்ணாய்ப் போகிறேன்

ஐந்தடி மூடுற நேரம்..

ஆறடி நிலமுண்டு யார்க்கும்…

நெசமல்ல நம் வாழ்வு.

இது வெறும் கனவே தான்.

உயிரே.. உயிரே..

உன்னை விட்டுப் போகிறேன்

கதைசொல்லி ஆண்:

பாவங்கள் செய்த யாவர்க்கும் இங்கு சாபங்கள் வந்து தொடரும்

இருக்கின்ற போது அவளிட்ட சாபம் எதுவென்று நாளை புரியும்

பெண்ணாக வந்த தெய்வத்தை எண்ணி ஒரு கோயில் கட்டி முடிப்பீர்

பழிபாவம் தீர தினந்தோறும் வந்து வணங்குங்கள் நன்மை பெறுவீர்!

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: