ஒலிக்காத இளவேனில்: உமா கணேஸ்

18758_299534398277_559093277_4568182_4680238_aமுதலில் இந்த கவிதைத்தொகுப்பை வாசிக்க காரணமாய் இருந்த திரு மைக்கேல் அமல்ராஜ் அவருக்கு என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னையும் ஒரு பொருட்டாய் மதித்து என் கருத்திற்காக பொறுமை காத்ததிற்காய் நன்றியும் வணக்கமும்.

இனி இந்த தொகுப்பினை அளித்த தான்யா மற்றும் பிரதீபா தில்லைநாதன் அவர்களுக்கு வாழ்த்தினையும் பாராட்டுக்களையும் ஒருங்கே சொல்லிக் கொள்கிறேன்.
ஒரு கவிதைத்தொகுப்பினை,அதன் கற்பனைகளற்ற வரிகளில் சந்தித்தது இதுவே முதல் முறை. எது எப்படி இருப்பினும் தான் சொல்ல வந்த கருத்துக்களில் இருந்து பிறழாமல் சொல்லிய விதம் என்னை வேறு எங்கும் திசை திருப்பாமல் இருக்கச்செய்தது என்றால் மிகை இல்லை.
இனி , பிரதீபாவின் முன்னுரையில் இருந்து, எனக்கு பிடித்த சில வரிகள்…… “இது பெண்களுடைய பாடுபொருள்களது மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகள் குறித்து ஆண்கள் ஊடாக ஏற்படுத்தப்படும் சிக்கல் உணருதலாயும் இருக்கலாம்.அவளது உடலில் ஒரு அங்கமான கருப்பை மீதிலான அவளது உரிமையை நிர்ணயிப்பது ஆண் மத பீடங்கள், மற்றும் அரசாங்ககள்……” என்ன ஒரு சாட்டையடி இந்த சமூகத்திற்க்கு.–
முடிவில்லா யுத்தம் என்னும் கவிதையில் ரேவதியின் இந்த வரிகளில் நெஞ்சம் கனக்கிறது……..
துயருறும் பெண்ணின் இதயத்தில் இருந்து எழும் நம்பிக்கையையும் அதற்கான ஏக்கத்தினையும் தூர விலக்கி என்னால் நடக்க முடியவில்லை……………
நிவேதாவின் இந்த கவிதை தலைப்பே………எங்கோ கொண்டு செல்கிறது எமை……”புகையெனப்படரும்.பிணங்களின் வாசம்”
வார்த்தைகளை வடிகட்டியது உடல் தின்று செறித்த கவிதை…………//
அனாரின் ///காற்றில் அலைகின்றன என்கவிதைகளைப்போல ……../// வரிகள் என் மனவறையுல் குரிக்காண்டு விட்டது. அதிலும் அவரின் எனக்குள் வசிக்க முடியாத நான்…………கேட்கும் கேள்விகளுக்கான விடை தேடலில் நான்.
ஆழியாளின் இந்த கவிதை வரிகள்///கருவறையின் இருட்சுடரில் மற்றுமோர் “அவள்” ஜனிக்கத் தொடங்குகிறாள்.// பெண்மையை போற்றும் வரியாக இருக்கிறது
சரண்யாவின் அங்கங்கே அலையும் மனிதர்கள் ///கவிதை வரிகள் நம்மையும் சிந்திக்க வைக்கிறது.
வசந்தியின் ‘ரகஸ்யம்’ பிரபஞ்ச ரகஸ்யங்களை காண அழைக்கிறது.
துர்காவின் இந்த கவிதை வரிகளில், அவருக்கான சுவடுகளை அவர் விட்டுச் சென்றது தெரிகிறது.
அவரின் மகள்
இவரின் மனைவி
உங்களின் தாய் எனபதை விட
நான் என்பதாக
விட்டுச் செல்ல விரும்புகிறேன்
எனக்கான
என் சுவடுகளை
இன்னும் இன்னும் கவிதை வரிகளை எழுதிகொன்றே போக ஆசையாய் தான் இருக்கிறது. ஒரு யுத்த தேசத்தினின்றும் மலர்ந்த காந்தள் மலர்களாய்…..
இளவேனிற் பூக்காளாய், பூத்து எங்கும் மலர்ந்து ஒலிக்கட்டும் இந்த “ஒலிக்காத இளவேனில்.”
கவிதைத்தொகுப்பின் பிறபகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் அதிலும் இந்த கவிதைப் பெண்களன் காத்திருப்பு பிரமிப்பு அடையச் செய்கிறது. பெண்களின் மவுனம் யாரையும் தொந்தரவு செய்ததில்லை.பெண்களையே கூட! இந்த வரிகளை எனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூட பகிர்ந்து கொண்டேன்.
ஆண்களைப் போல்  பெண்கவிஞர்கள் அறியப்படவில்லை என்ற கருத்தும் உண்மையானதே.
மைதிலியின் எல்லாக் கவிதைகளும் பிடித்திருக்கிறது. அதிலும் பெண் ஒரு கவிதை எழுதுவது ஆணைப்போல் அல்லாது அத்தனை வீட்டுக் காரியங்களுக்கு பின்னால் நேரமிருப்பின் எழுதுவதாய் அதற்கான மனோனிலையமைக்காய் காத்திருப்பதை அழகாய் சொல்கிறது. றெஜி, தான்யா,பிரதீபா, தர்சினி என்று எல்லோரின் கவிதைகளும் இயல்பாய் ஒரு விஷய்த்தை சொல்லும் பாங்கு நன்றாக உள்ளது.

வாழ்த்துக்களுடன்!
உமா கணேஶ்

umaganesh
Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: