அவர்கள் வீடு சென்றார்கள் – மாயா ஆஞ்ஜலோ

மாயா ஆஞ்ஜலோ (1928-):

angelou-maya

ஆபிரிக்க அமெரிக்கரான இவர் தான் கறுப்பர் என்பதிலும் பெண் என்பதிலும் கர்வம் நிறைந்த கவிஞர். அதிகம் விற்பனையாகும் (Best sellers) பல புத்தகங்கள எழுதுகிறபோதும் இவரது திமிரும் கம்பீரமும் தனித்துவமானவை. அவரது சில கவிதைகளை மொழிபெயர்க்க எடுத்துக் கொண்டு முயற்சிகள் இவை. Bantam Books-ஆல் வெளியிடப்பட்ட Maya Angelou: Poems என்கிற தொகுப்பிலிருந்து.

1.

அவர்கள் வீடு சென்றார்கள்

தம் வாழ்க்கையில்

ஓர்முறை தானும்

என்னைப் போலொரு பெண்ணை

தெரிந்திருக்கவில்லை என்று

வீடு சென்று

அவர்கள்

தம் மனைவியரிடம் சொன்னார்கள்

ஆனால்… அவர்கள் வீடு சென்றார்கள்

என் வீடு நக்கக்கூடியளவு துப்பரவென

நான் பேசிய எந்த சொல்லும்

கடுமையற்றதென

என்னிடம் மர்மம் நிறைந்த காற்று

இருந்ததென

அவர்கள் சொன்னார்கள்

ஆனால்….. அவர்கள் வீடு சென்றார்கள்

என் துதிகள்

எல்லா ஆணினதும்

உதடுகளில் இருக்கின்றன

எனது புன்னகையை

நகைச்சுவையை

தொடையை

அவர்கள் விரும்பினார்கள்

(அதற்காய்)

ஓர் இரவை

அல்லது இரண்டோ மூன்றோ இரவுகளை(ச்)

செலவிட்டார்கள்

ஆனால்….

=========================================

They Went Home

They went home and told their wives,
that never once in all their lives,
had they known a girl like me,
But… They went home.

They said my house was licking clean,
no word I spoke was ever mean,
I had an air of mystery,
But… They went home.

My praises were on all men’s lips,
they liked my smile, my wit, my hips,
they’d spend one night, or two or three.
But…

Maya Angelou
(Translated in 2003 & published in 'matrathu' magazine 2004)
Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: